மத்ஹப் தாவும் விளையாட்டு!!!!
??????????????????????
விரும்பிய மத்ஹபை விரும்பிய விதத்தில் பின்பற்றிக் கொள்ளலாம் என்பது போல ஒருவர் முகநூலிலும் வட்ஸ்அப் பொது அகவுன்ட் ஒன்றிலும் மொட்டையாக எழுதியிருந்தார். இது தவறாகும்.
எங்கெல்லாம் " ஒருவர் ஒரு மத்ஹபில் இருக்கும் போது ஒரு மஸ்அலாவில் பிரிதொரு மத்ஹபையும் பின்பற்றிக் கொள்ளலாம் " என சொல்லப்பட்டுள்ளதோ அதன் கருத்து என்னவெனில் குறிப்பிட்ட ஒரு மஸ்அலாவில் எமது மத்ஹபில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை விட பிரிதொரு மத்ஹபில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது ஆதார அடிப்படையில் பலமானதாக இருப்பின் அச்சந்தர்ப்பத்தில் அந்த மாற்று மத்ஹபின் தீர்ப்பை எடுக்கலாம் என்பதுதானே தவிற தனக்கு தனது மத்ஹபில் சொல்லப்பட்ட தீர்ப்பு சார்பாக இல்லையென்பதால் தனக்கு சார்பான தீர்ப்பை மாற்று மத்ஹபுகளிலும் தேடி அலையலாம் என்பதல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அனுமதியும் கூட " தர்ஜீஹ் " எனப்படும் ஆதாரங்களுக்கு மத்தியில் முன்னுரிமைப் படுத்தும் அறிவு உள்ளவர்களுக்கேயன்றி அனைவருக்குமல்ல.
கேள்வி : ஆதாரங்களுக்கு மத்தியில் முன்னுரிமைப் படுத்த தகுதி பெற்ற மாற்று மத்ஹபைச் சார்ந்த அல்லது மத்ஹப் சாராத ஒருவர் மத்ஹபில் முடிவாகச் சொல்லப்பட்ட தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்புடைய ஆதாரத்தை அவரது சுய ஆய்வின் பிரகாரம் முதன்மைப்படுத்தி வேறொரு தீர்ப்பு வழங்கினால் அதை எடுத்து பின்பற்றலாமா?
பதில் : மத்ஹபுடைய ஆதாரத்தை விட அவர் சொல்லும் ஆதாரம் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தாலும் அது அவரது கருத்து மட்டும்தான். ஆனால் மத்ஹபில் சொல்லப்பட்ட ஆதாரம் மத்ஹபுடைய சட்ட வல்லுனர்களிடம் வலுவானது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மத்ஹபுடைய சட்ட வல்லுனர்களும் குறிப்பிட்ட மஸ்அலாவோடு தொடர்பு பட்ட ஆதாரங்களை ஆய்ந்து அதில் முதன்மைப்படுத்த வேண்டியதைத்தான் முதன்மைப்படுத்தி சட்டத்தை இயற்றியுள்ளனர்.
ஒருவர் ஒரு மத்ஹபில் இருக்கும் போது மற்றொருவர் மத்ஹபுக்கு மாற்றமான ஒரு தீர்ப்பை முதன்மைப்படுத்தி சொல்லும் போது அவரது தீர்ப்பை பின்பற்றுவதை விட மத்ஹபில் சொல்லப்பட்ட தீர்ப்பை பின்பற்றுவது மேலாகும். ஏனெனில் மத்ஹபுடைய குறித்த தீர்ப்பு ஒட்டுமொத்த மத்ஹபுடைய சட்ட வல்லுனர்களிடமும் ஏற்கப்பட்டதாகும். ஓரிருவர்களின் மாற்றமான ஆய்வும் தீர்ப்பும் அதை முறியடிக்க தகுதியற்றவையாகும்.
விளைவு
-----------
இது போல மொட்டையாக மஸ்அலாக்களை முன் வைப்பதால்தான் சமுகம் தங்களுக்கு சார்பான தீர்ப்புகளைத் தேடி வரம்பு மீறும் காட்சிகளையும் பார்க்கின்றோம்.
இதனால் சமுகம் இழைக்கும் பாவங்களையும் இவ்வாறு மொட்டையாகத் தீர்ப்புச் சொல்பவர்கள்தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதை மறக்கலாகாது.
ஒரு மத்ஹபை மட்டும் ஏன் பின்பற்ற
......……………………….............
வேண்டும்
...............
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட " இத்திபாஉல் ஹவா " எனப்படும் மனோ இச்சையைப் பின்பற்றுவதையும், " ததப்புஉர் ருகஸ் " எனப்படும் தனக்கு சார்பான தீர்ப்புகளைத் தேடி அலையும் பண்பையும் விட்டும் தவிர்ந்து கொள்வதற்காகவே ஒரு மத்ஹபை மட்டும் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.
ததப்புஉர் ருகஸ், இத்திபாஉல் ஹவா இரண்டினதும் விளைவாக ஒருவரது அமல் சில சமயம் சட்டக் கலை வல்லுனர்களிடம் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆகும் நிலைக்குத் தல்லப்படுகின்றது. ஏனெனில் ஒருவர் ஓரே அமலில் இரு வித மஸ்அலாக்களில் இரு வேறுபட்ட மத்ஹபுகளைப் பின்பற்றும் சமயம் இந்த மஸ்அலா அந்த மத்ஹபின் பார்வையிலும் அந்த மஸ்அலா இந்த மத்ஹபின் பார்வையிலும் பிழை என்ற நிலையில் இருக்குமானால் இவ்விரு மத்ஹபுகளின் பார்வையிலும் இவரது குறிப்பிட்ட அமல் பாதில் என்ற நிலையை எத்துகின்றது. இதற்கு " தல்பீக் " எனப்படும்.
கேள்வி : ஸஹாபிகள் காலத்தில் தீர்ப்பு கேட்கும் தரத்தில் இருந்த ஸஹாபிகள் குறிப்பிட்ட ஒரு ஸஹாபியிடம் மட்டுமின்றி பொதுவாக தீர்ப்பு வழங்கத் தகுதி பெற்ற அனைத்து ஸஹாபிகளிடமும்தானே தீர்ப்புகள் கேட்டு அமல் செய்தனர்?
பதில்: ஸஹாபிகளிடம் அறவே இத்திபாஉல் ஹவா, ததப்புஉர் ருகஸ் இரண்டுமே இருக்கவில்லை. அத்துடன் தாபிஊன்களின் காலப்பகுதியில் பெரும்பாலும் மக்கள் அவரவர் ஊரிலுள்ள தீர்ப்பு வழங்கத் தகுதியான ஸஹாபிகளிடம் மட்டுமே தீர்ப்புகள் கேட்டனர் என்பது வரலாறு சொல்லும் ஓர் உண்மை. இதனால்தான் சிலர் இப்னு அப்பாஸை பின்பற்றுவோர் என்றும் மற்றும் சிலர் இப்னு மஸ்ஊதைப் பின்பற்றுவோர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.?
ஆக்க முடிவு
****************
ஆதாரங்களை தரப்படுத்தி முதன்மைப்படுத்தும் ஆற்றல் உள்ள ஒருவர் தான் இருக்கும் மத்ஹபுடைய தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்பை ஆய்வடிப்படையில் தரமானதாகக் கண்டால் அவருக்கு மத்ஹபை விட்டு விட்டு மாற்றுத் தீர்ப்பை பின்பற்றலாம். ஆனால் பிறரை நிர்பந்திக்கக் கூடாது.
இவ்வாறு ஓரிருவர் சுய ஆய்வின் படி மத்ஹபுக்கு மாற்றமாகத் தீர்ப்பு வழங்கும் போது நாம் அவர்களைப் பின்பற்றுவதை விட மத்ஹபை பின்பற்றுவதே மேல்.
இதற்கு மார்க்க நலம் பேணல் என்றே சொல்ல வேண்டும். பினிவாதம் என்றோ மத்ஹப் வெறி என்றோ அல்ல!!!
ஆக்கம் :
ஹனீபா றஹ்மதுல்லாஹ் ரஹ்மானி, உமரி.
2015 / 06 / 09 م
1436 ه

Comments
Post a Comment