தாடி வளர்ப்பது மார்க்கக் கட்டளையா ? சமுக வழமையா ? ! ஆண்கள் தாடி வளர்ப்பதை மார்க்கக் கட்டளை என்பதை விட சமுக வழமை என்பதே மிகப் பொருத்தம் என ஒரு சிலர் எண்ணுகின்றனர் , பேசுகின்றனர் , எழுதுகின்றனர் . அதற்கு அதாரமாக சில சமகால , அண்மைக்கால அறிஞர்களின் கூற்றுக்களை சொல்கின்றனர் . முன்னைய அறிஞர்களிடம் தாடி தொடர்பாக அது வாஜிபா ? இல்லையா ? என்ற கருத்து வாதம் இருந்திருக்கலாம் . ஆனால் அது மார்க்கக்கட்டளையா ? சமுக வழமையா ? என்ற ஒரு வாதம் இருந்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு என்பது எனது எண்ணம் . ஏனெனில் தாடி தொடர்பாக அவ்வளவு தெளிவான நபிமொழிகள் வந்துள்ளன . தாடி வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய நபிமொழிகள் ஏறக்குறைய ஐந்து வார்த்தைப்பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளன . أوفروا / وفروا / أرخوا / أرجوا / أعفوا என்பனதான் அவ்வைந்து வார்த்தைகளும் . தாடி வளர்ப்பது ஒரு சமுகவழமைதான் என்பதற்கு முன்வைக்கப்படும் முக்கிய சான்று நபிமொழிகளில் இடம்பெறும் خالفوا المشركين ، خالفوا اليهود، خالفوا ا...
Posts
குர்ஆனுடைய பெயர்கள்
- Get link
- X
- Other Apps
அல்குர்ஆனுடைய பெயர்களின் எண்ணிக்கை... 📓📓📓📓📓📓📓📓📓📓📓📓📓 இமாம் நவவி ரஹிமஹுள்ளாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு பொருளுக்கு ஒன்றுக்கும் அமிகமான பெயர்கள் இருப்பது அப்பொருளுடைய சிறப்பை உணர்த்துவதற்காகும். (நூல் :தஹ்தீப் அல்- அஸ்மா/ பா: 3 பக்:332 ) அந்த அமைப்பில் புனித அல்- குர்ஆனுடைய சிறப்புகளை உணர்த்தும் வகையில் அதற்கும் பல பெயர்கள் இருப்பதை பார்க்கலாம். குர்ஆனுக்கு உள்ள பெயர்களை இரு வகைகளாக அறிஞர்கள் நோக்குகின்றனர். ஒன்று: عَلَمْ. அதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதரையோ சுட்டிக்காட்டப்படும் விதத்தில் இடப்படும் பெயர். இரண்டு: وَصْفْ / صِفَةٌ அதாவது இவ்வகைச் சொற்கள் ஒரு பொருளுக்கோ ஒரு மனிதருக்கோ பெயராக இடப்படுவதில்லை; மாறாக இவை அப்பொருளில் அல்லது மனிதரில் உள்ள பண்பை உணர்த்தும். உதாரணமாக "அப்துல்லாஹ் மௌலவி" என்றால் இதில் அப்துல்லாஹ் என்பது ஒருவரது பெயராகவும் மௌலவி என்பது அவரிடம் உள்ள அறிவு சார்ந்த ஒரு பண்புமாகும். இவற்றுக்கு பண்புப் பெயர்கள் எனலாம். புனித அல்- குர்ஆனுக்கு பெயர் என்ற வகையில் அறிஞர்கள் பின்வரு ஐந்து பெயர்களை சொல்கின்றனர். ...
- Get link
- X
- Other Apps
ஆலிம்களும் அவர்கள் சுமந்துள்ள பொறுப்புக்களும் ஆற்ற வேண்டிய பணிகளும் HANEEFARAHMATHULLAH بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل العلم وأهله، وأوجب عليهم بعد نبيه تعليم القرأن وتبيينه، وجعلهم أئمة لهذه الأمة، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله، وصفيه وخليله، والصلاة والسلام على من بلّغ الرسالة، وأدى الأمانة، ونصح الأمة، وكشف الله به الغمة نبينا محمد وعلى آله وأصحابه الذين اشترى الله منهم أنفسهم وأموالهم بأن لهم الجنة. وبعد ' ஆலிம் ' எனும் வாசகம் எவ்வளவு கண்ணியத்தையும் மதிப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளதோ அதேயளவு பாரிய பொறுப்புக்களையும் பணிகளையும் தன்னகத்தே தாங்கி நிற்கின்றது. ஆலிம் என பெயர் எடுத்தவர்களும் பெயர் எடுக்க ஆசை வைப்பவர்களும் தமக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் மட்டும் எதிர் பாராது அப்பெயர் தாங்கி நிற்கின்ற பாரிய பொறுப்புக்களையும் பணிகளையும் நன்றாகவே புரிந்தவர்களாகவும் உணர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆலிம்கள் '...
- Get link
- X
- Other Apps
دعاء بطريقة نحوية دعته زوجة رجل عندما تزوج زوجة ثانية، اضحكوا معي قليلا. _____________________________________ ١- أللهم اجمعه بها جمع تكسير واجمعه بي جمع سالم ٢- أللهم اجعلها من أخوات " كان " واجعلني من أخوات " صار " ( تعني أن يجعل الضرة زوجة ماضية وإياها زوجة جديدة في الحال ) ٣- أللهم اجعل زوجي " مكسورا " عند ذهابه إليها واجعله " منصوبا " عند ذهابه إلي ( تعني أن يجعله لا يستمتع مع الضرة ويستمتع معها ) ٤- أللهم اجعل معاملتها معه مشكلة مثل " الشد " واجعل معاملتي معه لقاء وتوفيقا مثل " الضمة " وسكونا وراحة " مثل السكون " ٥- أللهم اجعل لي زوجي مثل " المبتدأ " يأتي إلي أولا واجعله لها مثل " الخبر " يأتيها أخيرا ٦- أللهم اجعله لي مثل " الفاعل " الذي يعمل واجعله لها مثل " الملغى " الذي ألغي عمله ٧- أللهم اجعله لي مثل " المبني " لا ينفك عني في أي حال واجعله لها مثل " المعرب ٨- أللهم اجعله لي مثل " الحال " واجعله لها مثل " الماضي " و...
- Get link
- X
- Other Apps
தூர நோக்கு: ஒரு பகிர்வு ==================== முன்னொரு காலத்தில், ஒரு ஊரில், பார்வைக் கோளாறு உள்ள ஒருவன் இருந்தான். அவனது நன்பர்கள் எப்போதும் அவனது பார்வைக் கோளாறை இடித்துக் காட்டி கலாய்ப்பவர்களாக இருந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவன் தனது பார்வையின் வீச்செல்லையை நன்பர்களுக்கு நிரூபிக்க வழக்கமாக நன்பர்கள் சேரும் இடத்தில் இருந்து தூரத்தில் இருந்த ஒரு செடியில் ஒரு ரோஜாப் பூவை வைத்து விட்டான். நன்பர்கள் வந்ததும், "அதோ பாருங்கள்! அந்த ரோஜாதான் எத்துனை அழகு" என்றான். ஆச்சரியப்பட்ட நன்பர்கள் உற்று நோக்கினார்கள் தூரத்தில் ஏதோ ஒரு மலர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது. நமக்கே மங்கலாகத் தெரியும் பொருள் பார்வைக் கோளாறு உள்ள இவனுக்கு எப்படித் தெரிகிறது என்று நன்பனைக் கேட்டார்கள். அதற்கு அவன் "எனக்குப் பார்வைக் கோளாறு இல்லை. உங்களுக்குத்தான் பார்வைக் கோளாறு. இதோ பார்த்துக் கொண்டே இருங்கள் நான் போய் அந்த ரோஜாவை எடுத்து வருகிறேன்" என்று கூறி அவன் எழுந்து சென்றான். எழுந்து ரோஜாவை எடுக்க நடந்து சென்ற அவன்.. நடந்து சென்ற அவன் வழியில் படுத்திருந்த ஒரு எருமை மாட்டில் இடறி வி...