தாடி வளர்ப்பது மார்க்கக் கட்டளையா? சமுக வழமையா?!


ஆண்கள் தாடி வளர்ப்பதை மார்க்கக் கட்டளை என்பதை விட சமுக வழமை என்பதே மிகப் பொருத்தம் என ஒரு சிலர் எண்ணுகின்றனர், பேசுகின்றனர், எழுதுகின்றனர். அதற்கு அதாரமாக சில சமகால, அண்மைக்கால அறிஞர்களின்  கூற்றுக்களை சொல்கின்றனர்

முன்னைய அறிஞர்களிடம் தாடி தொடர்பாக அது வாஜிபா? இல்லையா? என்ற கருத்து வாதம் இருந்திருக்கலாம். ஆனால் அது மார்க்கக்கட்டளையா? சமுக வழமையா? என்ற ஒரு வாதம் இருந்திருக்க வாய்ப்பு மிகக்குறைவு என்பது எனது எண்ணம். ஏனெனில் தாடி தொடர்பாக அவ்வளவு தெளிவான நபிமொழிகள் வந்துள்ளன

தாடி வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய நபிமொழிகள் ஏறக்குறைய ஐந்து வார்த்தைப்பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளன
أوفروا/ وفروا/ أرخوا/ أرجوا / أعفوا என்பனதான் அவ்வைந்து வார்த்தைகளும்

தாடி வளர்ப்பது ஒரு சமுகவழமைதான் என்பதற்கு முன்வைக்கப்படும் முக்கிய சான்று  நபிமொழிகளில் இடம்பெறும் خالفوا المشركين ، خالفوا اليهود، خالفوا المجوس போன்ற வார்த்தைகள்தான். அதாவது அன்றைய மாற்று மதத்தவர்கள் தாடியை இல்லாமலாக்கிவிட்டு மீசையை மட்டும் வளர்க்கும் பழக்கவழக்கம் உடையவர்களாக இருந்திருக்கலாம், எனவே நபியவர்கள் அதை கருத்திற்கொண்டுதான் தாடியை வளர்க்கச் சொன்னார்கள்




Comments

Popular posts from this blog

குர்ஆனுடைய பெயர்கள்