دعاء يحفظك من إصابة العين
கண்னூரை விட்டும் பாதுகாப்பு
روى الحافظ ابن عساكر من طريق خيثمة بن سليمان الحافظ، حدثنا عبيد بن محمد الكشوري، حدثنا عبد الله بن عبد الله بن عبد ربه البصري عن أبي رجاء عن شعبة، عن أبي إسحاق عن الحارث عن علي رضي الله عنه أن جبريل أتى النبي صلى الله عليه وسلم فوافقه مغتما فقال: يا محمد ما هذا الغم الذي أراه في وجهك: قال: «الحسن والحسين أصابتهما عين» قال: صدق بالعين فإن العين حق أفلا عوذتهما بهؤلاء الكلمات؟ قال «وما هن يا جبريل؟» قال: قل اللهم ذا السلطان العظيم والمن القديم، ذا الوجه الكريم ولي الكلمات التامات والدعوات المستجابات، عاف الحسن والحسين من أنفس الجن وأعين الإنس، فقالها النبي صلى الله عليه وسلم، فقاما يلعبان بين يديه فقال النبي صلى الله عليه وسلم «عوذوا أنفسكم ونساءكم وأولادكم بهذا التعويذ فإنه لم يتعوذ المتعوذون بمثله»
نقلا من تفسير ابن كثير ج ٨ ص ٢٢٤
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள் அச்சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கவலையுடன் இருந்ததைப் பார்த்தார்கள் அப்போது " முஹம்மதே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் நீங்கள் கவலையுடன் இருப்பதை நான் பார்க்கின்றேன் " எனக்கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் " ஹஸன், ஹுஸைன் இருவருக்கும் கண்னூரு ஏற்பட்டுள்ளது " என்றார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் " கண்னூரை உண்மைப்படுத்துங்கள் நிச்சயமாக கண்னூரு உண்மையாகும், இவ்வார்த்தைகளின் மூலம் அவ்விருவருக்கும் பாதுகாப்புத் தேடவில்லையா? " எனக்கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல்லம் அவர்கள் " அவை என்ன வார்த்தைகள் " எனக்கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் " அல்லாஹும்ம தஸ்ஸுல்தானில் அழீம் வல் மன்னில் கதீம் தல் வஜ்ஹில் கரீம் வலிய்யல் கலிமாதித் தாம்மாதி வத் தஃவாதில் முஸ்தஜாபாதி ஆபில் ஹஸன வல் ஹுஸைன மின் அன்புஸில் ஜின்னி வஅஃயுனில் இன்ஸி " என்று கூறுங்கள் என்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வார்த்தைகளை ஓதியவுடன் இருவரும் எழுந்து விழையாடவாரம்பித்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் " இவ்வார்த்தைகள் மூலம் உங்களுக்கும் உங்களது பெண்கள், பிள்ளைகளுக்கும் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள் பாதுகாப்புத் தேடியவர்கள் ( இது வரை ) இது போன்றவொன்றின் மூலம் பாதுகாப்புத் தேடியிருக்க முடியாது " என்றார்கள்.
அறிவிப்பாளர் : அலி ரழியள்ளாஹு அன்ஹ்
நூல் : இப்னு அஸாகிர்
பார்க்க : தப்ஸீர் இப்னு கதீர் பா: 8 பக்: 224
Comments
Post a Comment