இஸ்லாத்தை சரியாகப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகள் அவசியமா?
<><><><><><><><><><><><><>
இஸ்லாம் மார்க்கம் அழகானது, பூர்த்தியானது, இலகுவானது, எவராலும் குறைகாண முடியாதது, இடைச்செருகல்கள் மற்றும் திரிபுகளை விட்டும் மிகத்தூரமானது. ஏனென்றால் அல்லாஹ் தனது மார்க்கத்தை காலாகாலம் மிக நல்லவர்களைக்கொண்டும் நாணயமிக்கவர்களக்கொண்டும் பாதுகாக்கின்றான்.
அல்லாஹ் தனது மார்க்கத்தை காப்பதற்கு தேர்வு செய்த நல்லவர்கள் பட்டியலில் முன்னணி வகிப்பவர்கள் கண்ணியமிக்க ஸஹாபிகள்தான்.
வஹி இறங்கிய காலத்தை விட்டும் மிகத்தூரமான காலத்தில் நாம் வாழும் இந்நிலையில் குர்ஆனையும் ஹதீஸையும் சரிவரப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகளும் அவசியமா என ஆங்காங்கே ஒருசில நேர்வழியறியாத, அல்லது நேர்வழியறிந்த வம்புத்தனமிக்க இயக்கங்களால் சந்தேகங்கள் கிழப்பி விடப்படுகின்றன.
இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படைகள் எனப்படும் உஸூலுல் பிக்ஹ் கலையின் அறிஞர்கள் கூட ஸஹாபியின் வார்த்தையை ஆதாரமாகக் கொள்ளலாமா? முடியாதா? என்பதில்தான் பல கருத்துகளை முன்வைத்தார்களே தவிற இஸ்லாத்தை சரிவரப் புரிவதற்கு ஸஹாபிகளின் கருத்துகள் அவசியம் என்பதில் முரண்பாடு காணவில்லை.
சராசரி அறிவுடைய முஸ்லிமுக்குக்கூட இவ்விவகாரம் மிக இலகுவாகவே புரிந்து விடும். ஆயினும் நாம்தான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுகின்றோம் என மார்தட்டும் அநேகர்களுக்கு இது இன்னும் புரியவில்லையா? அல்லது அற்ப நாண்கு காசுகளுக்கு அடிமைகளாகி விட்டனரா? என்ற விடயம் என்போன்ற இன்னும் அதிகமானவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
மற்றுமொரு பக்கத்தில் " ஸஹாபிகளைப் பின்பற்றுபவன் வழிகேடன் " என்பதாக பல வழிகேடர்கள் கோஷமிட்ட வண்ணமுள்ளனர். இது எவ்வளவு பாரதூரமான வார்த்தை என்பதை அல்லாஹ்தான் விளங்கச் செய்ய வேண்டும். அல்லாஹ் தனது தூதரின் தோழமைக்காகவும் தனது மார்க்கத்தை காப்பதற்காகவும் பொருந்திக்கொண்டவர்களை பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு வழிகேடு உண்டாகலாம். வழிகேடு ஏற்படும் எனின் ஸஹாபிகளும் வழிதவறித்தான் வாழ்ந்தனரா என்ற கேள்வி எழுந்து விடுமல்லவா!
" இத்திபாஃ, தக்லீத் " என்ற இரு அறபு வார்த்தைகளும் பின்பற்றுதல் என்ற பொதுவான கருத்தை தமிழில் தந்தாலும் அறபு மொழியில் அவ்விரண்டு வார்த்தைகளுக்கும் மத்தியில் வேறுபாடுண்டு என்பதைப் புரிந்து கொள்ளத்தவறக்கூடாது. " இத்திபாஃ " என்றால் சொல்லப்படும் கூற்றுக்கான ஆதாரத்தைத் தெறிந்து அதைப்பின்பற்றுவதற்குச் சொல்லப்படுகின்றது. எனவே ஸஹாபிகளை இத்திபாஃ என்ற ரீதியில் பின்பற்றலாம் என்பதற்கு ஏகப்பட்ட ஆதாரங்களை அறிஞர் பெருந்தகைகள் ஏற்கனவே முன்வைத்துள்ளனர். அவர்களில் மிக முக்கியமாக இமாம் இப்னு கையிம் அல்- ஜௌஸிய்யஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களது " இஃலாமுல் முவக்கிஈன் " என்ற நூலில் ஏறத்தாள 46 ஆதாரங்களை சொல்லியுள்ளார்கள்.
மார்க்கத்தை சரிவரப் புரிவதற்கும் இத்திபாஃ என்ற ரீதியில் பின்பற்றப்படுவதற்கும் ஸஹாபிகள் அருகதையற்றவர்கள் என்று யாரெல்லாம் வாதாடுகின்றனரோ அவர்கள் வழிகெட்ட ஓரிரண்டு கொள்கையினரை விடவும் மோசமானவர்கள் என்று சொல்வதே சாலச்சிறந்ததாகும். ஏனெனில் தத்துவக்கலை, தர்க்கக்கலை போன்றவற்றில் வரம்புமீறி ஆய்வு செய்து வழிதவறிய ஒரிரண்டு கூட்டத்தினர் கூட ஸஹாபிகளை உரிய முறைப்படி மதித்திருக்கின்றனர். ஆனால் இன்றுநேற்று முழைவிட்ட ஓரிரண்டு காலான்கள் மட்டும் என்னவோ ஸஹாபிகளை மதிக்கின்றார்கள் இல்லை.
இறுதியாக மார்க்கத்தை சரிவரப் புரிவதற்கு ஸஹாபிகளின் கூற்றுகள்தான் இரண்டாம் தர அடிப்படை என்பதற்கும் அவர்கள் இத்திபாஃ என்ற ரீதியில் பின்பற்றத்தக்கவர்கள் என்பதற்கும் ஓரிரண்டு நியாயங்களை இங்கு தருகின்றேன். இவை நியாயங்கள் மட்டும்தானே தவிற ஆதாரங்களல்ல. ஆதாரங்களைப்பேச இந்த சில வரிகள் இடம்தரமாட்டாது.
நியாயங்களாவன :
1. அவர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள்.
2. அவர்களைப் பற்றிய திருப்தி, பொருத்தம் அடைந்த நிலையிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆனார்கள்.
3. குர்ஆன், ஹதீஸ் இரண்டைப் பற்றியும் மிக அதிகமாகவும் சரியாகவும் புரிந்து வைத்திருப்பவர்கள் அவர்களே.
4. அவர்களைப் பின்பற்றுமாறு ஹதீஸிலே ஏவல் வந்துள்ளது.
5. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஸஹாபித் தோழர்களை மிகச்சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் பட்டியலில் சேர்ந்தார்கள்.
6. ஸஹாபிகளைப் பின்பற்றுவதானது " இத்திபாஃ " என்ற அனுமதிக்கப்பட்ட பின்பற்றலாகும்.
7. " பிர்கதுன் நாஜியா " என விவரிக்கப்படும் வெற்றியடையும் கூட்டமும் அவர்களே.
8. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத் 73 கூட்டமாகப் பிரிந்து அதில் ஒரு கூட்டம் மட்டுமே சுவனம் நுழையும். அக்கூட்டம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் " மா அன அலைஹி வஅஸ்ஹாபீ " என வர்ணிக்கப்பட்டது. அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும்.
ஆக்கம் : ஹனீபா றஹ்மதுல்லாஹ் ரஹ்மானி, உமரி.

Comments
Post a Comment